Sunday, February 5, 2012

இஸ்ரேல் பற்றிய ஊடகங்களின் பத்து பெரிய பொய்கள்

இஸ்ரேல் ரப்பிகள்.

 மைக்கல் கோலன் (Michel Collen) ஒரு பெல்ஜிய எழுத்தாளர் அதுபோல் அவர் ஒரு ஊடகவியலாளரும் கூட.அவர் இஸ்ரேல் பற்றி எழுதிய புத்தகமான " Isrel - Let's Talk About It " என்ற புத்தகத்தில் இஸ்ரேல் பற்றி பொய்யான தகவல்கள் பரப்பி இஸ்ரேலுக்கு அனுதாபம் தேடிக்கொடுத்துக் கொண்டிருக்கிற அமெரிக்க மற்றும்  ஐரோப்பிய ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளார்.அவர் இதை தனது புத்தகத்தில் "பத்து பெரிய பொய்கள்" என்ற தலைப்பின் கீழ் மிகத் துல்லியமாக விவரித்துள்ளார். இவை இஸ்ரேலின் இருப்பையும் அதன் கொடூர செயற்பாடுகளையும் நியாயப்படுத்த மேற்கத்தைய  ஊடகங்களால் பயன்படுத்தப்பட்டு வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.
1.இஸ்ரேல் என்ற நாடு ஐரோப்பாவில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டமையால் உருவாக்கப்பட்டது.இந்த கருத்து முற்றிலும் தவறானது அதுபோல் சுத்தப் பொய்யானது.ஏனெனில் தேசியவாத யூதர்கள் பலஸ்தீன பூமியை ஆக்கிரமிக்க திட்டமிட்டு முடிவு எடுக்கப்பட்டது 1897 ஆம் ஆண்டாகும்,1897 ஆம் ஆண்டு சுவிசர்லாந்து பேசல் நகரில் இடம்பெற்ற முதலாவது சியோனிச காங்கிரஸ் மாநாட்டில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.இதிலிருந்து விளங்கிக் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டமை இஸ்ரேல் என்ற நாடு உருவாக்க மேட்கோள்ளப்பட்ட திட்டங்களின் ஒரு படியேயாகும்.
முதலாவது சியோனிச மாநாடு - 1897 சுவிஸ்.
2.இஸ்ரேல் என்ற நாட்டின் உருவாக்கத்தை நியாயப்படுத்த முன்வைக்கப்படும் அடுத்த பொய் என்னவென்றால்,இஸ்ரேல் என்பது யூதர்களின் முன்னோர்களின் பூமி.யூதர்களை கி.பி.70 இல் ரோம தளபதியான டைடஸ் யூதர்களின் சொந்த பூமியிலிருந்து வெளியேற்றியதாக ஒரு வரலாறு பரவலாக கூறப்பட்டுவருகிறது.நிச்சயமாக இது ஒரு கதை மட்டுமேயாகும்.நான் யூத வரலாற்றாசிரியர்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒருவரான ஷலோமோ சாண்ட் என்பவரோடு உரையாடியுள்ளேன்.அவரின் கருத்துப்படி பலஸ்தீன பூமியிலிருந்து எந்தவித வெளியேற்றங்களும் வரலாற்றில் இடம்பெறவில்லை,ஆகவே தாய் பூமிக்கு திரும்பி வரல் என்ற விடயம் அர்த்தமற்றது என்றார்.

 தற்காலத்தில் பலஸ்தீனில் வாழும் மக்களே ஆதி யூதர்களின் உண்மையான  பரம்பரை,1947 இல் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் அல்ல.இந்த பூமியில் வாழ்த்த மக்கள் இந்த பூமியை விட்டு எங்கும் செல்லவில்லை என்று மேலும் சொல்லுகிறார் ஷலோமோ சாண்ட் அவர்கள் மேலும் அவர் கூறியதாவது யூத தேசம் என்ற ஒரு தேசம் வரலாற்றில் எங்கும் இருக்கவில்லை,ஏன்
யூதர்களுக்கு அவர்களுக்கே சொந்தமான மொழி,கலாச்சாரம் மற்றும் வரலாறு கூட இருக்கவில்லை.அவர்களுக்கு இருந்தது அவர்களிம் மதம் மதம் மட்டுமேயாகும்,ஒரு நாளுமொரு மதம் ஒரு நாட்டை உருவாக்குவதில்லை என்றார்.
The sack of Jerusalem, from the inside wall of the Arch of Titus, Rome

3.பலஸ்தீனை யூத குடியேற்ற ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்த போது பாலஸ்தீன் மனித சஞ்சாரமற்ற விவசாயத்துக்கு பொருந்தாத ஒரு பூமியாகவே இருந்தது.இது மேற்கத்தைய மீடியாக்கள் முன்வைக்கும் மூன்றாவதும் அர்த்தமற்றதுமான பொய்யாகும்.ஏனென்றால் பத்தொம்பதாம் நூற்றாண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பிரான்ஸ் உட்பட பலஸ்தீனத்தின் விவசாயப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான எழுத்துமூலமான் ஆதாரங்கள் நிறையவே உள்ளன.
Jaffa Between 1898 - 1914
4.நான்காவது பொய் என்னவெனில் சிலர் கூறுகின்றனர் எப்படியெனில் பாலஸ்தீனியர்கள் தமது சொந்த பூமியை அவர்களின் விருப்பத்தின் பேரிலே விட்டுச்சென்றனர் என்று.இதை பலர் நம்புகின்றனர் ஏன் நான் கூட நம்பியிருந்தேன்.இது மாபெரும்போயாகும்.இதை இஸ்ரேலிய வரலாற்றாசிரியர்கள் கூட மறுத்திரிகின்றனர்.பென்னி மொரிஸ் மற்றும் இலான் பெப்பே ஆகிய இஸ்ரேலிய வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி ஆயுதனகள் மற்றும் பயங்கரவாதம் என்பவற்றை பயன்படுத்தியே பலஸ்தீன மக்களை யூதர்கள் வெளியேற்றினர்,அவர்கள் தாமாக வெளியேறவில்லை.
Palestine refugees.

5.மத்தியகிழக்கில் காணப்படும் ஒரே ஒரு ஜனநாயக நாடு இஸ்ரேல் ஆகும்.அதை நாம் பாதுகாக்கவேண்டும்.இது அடுத்த பொய்யாகும்.எந்தவொரு ஜனநாயக நாட்டுக்கும் ஒரு சட்டம் உண்டு அதுபோல் வரையறுக்கப்பட்ட எல்லைகளும் உண்டு.உலகில் உள்ள அனைத்து ஜனநாயக நாடுகளிலும் இது காணப்படுகிறது,அனால் இஸ்ரேலைத் தவிர.இஸ்ரேல் எல்லையில்லா நீடிப்புத்திட்டம் கொண்ட ஒரு இதுவரை வரையறுக்கப்படாத நாடு.மேலும் இஸ்ரேலின் சாதனைகள் பாரிய இனவாதக் கருதுகொள்களைக் கொண்ட ஒரு சட்ட முறையாகும்.

No Legal Boundaries Yet.This Their Dream.
6.அமெரிக்க இஸ்ரேலை பாதுகாப்பதினூடாக மத்திய கிழக்கில் ஜனநாயகத்தை பாதுகாக்கிறது.இது ஒரு மாயை கலந்த பொய்யாகும்.இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் வருடாந்த செலவு மூன்று பில்லியன் டொலர்களாகும்.ஜனநாயக அமெரிக்காவின் இந்த பணம் அவ்வருடம் முழுக்க அப்பாவி பலஸ்தீன மக்களை அடிமைப்படுத்தவே பயன்படுகிறது.ஆனால் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய நோக்கம் ஜனநாயகம் அல்ல,அங்குள்ள எண்ணெய் வளங்களே.
American Democracy.

7.அமெரிக்க பாலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு நிரந்தர உடன்பாட்டை மேற்கொள்ள போராடிவருகிறது.இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயமாகும்.ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னைநாள் வெளிநாட்டு கொள்கைவகுப்பாலராக கடமையாற்றிய ஜாவியர் சொலோனா குறிப்பிடுகையில் "இஸ்ரேல் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் 21 ஆவது நாடாகும்"என்றார்.ஐரோப்பிய ஆயுத உற்பத்தியாளர்களுக்கும் இஸ்ரேலிய இராணுவத்துக்கும் இடையே பல உடன்பாடுகள் காணபடுகின்றன.
8.Antisemitism இது மேற்கத்தைய ஊடகங்களில் பாவிக்கப்படும் இன்னொரு இஸ்ரேலிய அனுதாப ஆயுதம்.நீங்கள் பலஸ்தீன வரலாற்றை நன்கு ஆராய்ந்து இஸ்ரேல் பற்றிய உண்மைகளை உலகுக்கு சொன்னாலோ அல்லது பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சனையில் இஸ்ரேலிய நலனைமட்டும் நோக்காகக் கொண்டு செயற்படும் அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளிகளின் முகத்திரியை கிழித்தாலோ உங்களுக்கு கிடைக்கும் பட்டமே Anti-Semite ஆகும்.இந்த ஆயுதம் கொண்டு உங்கள் வாய்களை மூட நினைக்கின்றனர்.

  ஆனால் நாம் இஸ்ரேலை கண்டிப்பதன் நோக்கம் இனத்துவேசமோ அல்லது Antisemitism அல்ல.நாம் கண்டிப்பது மூன்று இன மக்களிடமும் சம அளவில் நடந்துகொள்ளதா அப்பாவி மக்களை அடிமைப்படித்தி வைத்திருக்கும் அரசாங்கத்தேயாகும்.இப்படிப்பட்ட பொறுப்பு அற்ற அரசாங்கங்களின் நடவடிக்கை  காரணமாக மூன்று இன மக்களிடையே ஒரு பிரச்சனை இருந்தவண்ணமே உள்ளன.

To Keep You Silent
9.வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பில் மேற்கத்தைய ஊடங்கள் பெரும்பாலும் பலஸ்தீனையே குற்றம் சாட்டுகின்றனர்.முழு உலகுக்கும் தெரியும் யார் அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதத்தையும் வன்முறையையும் பாவிக்கிறார்கள் என்று.
Israeli girls write messages on shells

10.பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சனைக்கு தீர்க்க வழியில்லை இது தற்போது அடிக்கடி எழுப்பபபட்டுவரும் ஒரு கருத்தாகும்.இது சுத்தப் பொய்.தீர்வில்லாதது பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்னைக்கு அல்ல தீர்வில்லாதது இஸ்ரேளாலும் அதன் கூட்டாளிகளாலும் உருவாக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வரும் வெறுப்புக்கும் காழ்ப்புணர்ச்சிக்குமேயாகும்.பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சனைக்கு தீர்வுக்கான முதலில் இஸ்ரேல் பற்றியும் அதன் கொலைகார கூட்டாளிகள் பற்றியும் இவர்களின் உண்மையான முகங்கள் பற்றியும் உண்மைகள் ஊடகங்களில் வெளிவரவேண்டும்.இந்த கூட்டணிகளால் அப்பாவி பலஸ்தீன மக்கள் படும் துயரங்கள் வெளிக்கொனரப்பட வேண்டும்.இந்த நிலை வந்தாலே அந்நாட்டு மக்களால் அந்த அரசாங்கங்களுக்கு ஒரு அழுத்தத்தை பிரயோகிக்க முடியும்.
Award Winning Political Cartoon.By - Latuff.


Thanks To - Press Tv Article About Michel Collon's Book.
Pictures From - Wikipedia (first 6 photos)
Cartoons From - Latuff.(Link)

எல்லா கட்டுரைகளும் விமர்சனத்துக்கு உட்பட்டவையே.தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.

உங்கள் நண்பன் - எம்.ஹிமாஸ் நிலார்.

Monday, January 30, 2012

காந்தி படுகொலையும், ஹிந்துத்துவ அரசியலும்


சுதந்திர இந்தியா ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 2-ஆம் தேதியை காந்தி பிறந்த தினமாகவும், ஜனவரி 30-ஆம் தேதியை இரத்தசாட்சி தினமாகவும் அனுஷ்டித்து வருகிறது. ஆனால், காந்தி ஏன் கொல்லப்பட்டார்? என்பது மறந்துபோன ஒன்றாக மாறிவிட்டது.

காந்தி என்ற மகாத்மா, அவரைக் கொன்ற கொலைகாரன் கோட்ஸே, அவனது கும்பல் பரப்புரைச் செய்த அரசியல் சித்தாந்தம், அன்று நீடித்த தேசிய சூழல், சர்வதேச சூழல்கள், நீதிமன்றத்தில் கோட்ஸே வெளியிட்ட காரணங்கள்-ஆகியவற்றை இணைக்க முயன்றால் பல இடங்களில் பொருத்தமில்லாமையை நாம் உணரலாம். ஆகையால் காந்தி படுகொலை குறித்த மீளாய்வில் கூடுதலாக ஏதேனும் கூறவேண்டியது அவசியமாகும்.
1966-ஆம் ஆண்டுவரை காந்தி படுகொலை குறித்த ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டதற்கு மக்களின் மறதிக்கு நீண்ட ஆயுள் உண்டு என்பதுதான் காரணமா?
1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் தேதி மாலை 5.10 க்கு பிர்லா ஹவுஸிலிருந்து பிரார்த்தனை ஹாலிற்கு புறப்பட்டுச் சென்ற காந்தியடிகளை வினாயக் நாதுராம் கோட்ஸே என்பவன் வழியில் தடுத்து நிறுத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். கோட்ஸேயை தவிர காந்தியடிகளுடன் வந்தவர்கள் அனைவரும் பயந்து ஓடினர். தப்பிக்க கூட முயலாமல் கோட்ஸே தனது இரு கரங்களையும் நீட்டி போலீசாரை அழைத்து தன்னை கைது செய்ய கோரினான்.
பின்னர் நடந்த விசாரணையில் கோட்ஸே நீதிமன்றத்தில் 5 மணிநேரம் கொலையை நியாயப்படுத்தி வாக்குமூலம் அளித்தான். காந்தியை கொலை செய்தது குறித்து பெருமைக் கொள்வதாகவும், இக்கொலை முன்னரே நிகழ்த்தியிருக்க வேண்டியது எனவும் கூறினான்.
கோட்ஸே காந்தியை கொலைச் செய்ய கூறிய முக்கிய காரணங்களை பார்ப்போம்:
‘ஹிந்து-முஸ்லிம் பிரச்சனைகளில் காந்தி முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார். ஜின்னாவின் தேசப் பிரிவினைக்கு ஆதரவளித்தார். பிரிவினைக்கு பிறகும் அரசு கருவூலத்திலிருந்து பங்குத் தொகையான 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு அளிக்கவேண்டும் என காந்தி இந்தியாவுக்கு நிர்பந்தம் அளித்தார். பிரிவினையை தொடர்ந்து உருவான கலவரத்தில் காந்தி ஹிந்துக்களை நிராயுதபாணிகளாக மாற்றினார். காந்தி பாகிஸ்தானின் தேசத் தந்தையாவார்.’ என்பதாகும்.
கோட்ஸேவின் இக்கூற்று உண்மைக்கு உகந்ததா? என்பதை ஆராய நீதிமன்றம் தயாராகவில்லை. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி நீதிமன்றம் தண்டனையை வழங்கியது. கோட்ஸே, நாராயணன் ஆப்தே ஆகியோருக்கு மரணத் தண்டனையும், இதர நான்கு பேருக்கு ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டன. சாவர்க்கர் மீதான குற்றத்திற்கு ஆதாரமில்லை எனக்கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது. காந்தி படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சவர்க்கரை குற்றமற்றவர் என கூறி நீதிமன்றம் விடுதலைச் செய்தது விவாதத்தை கிளப்பியது. பின்னர் காந்தி படுகொலையை குறித்து மறுவிசாரணை நடத்திய கபூர் கமிஷன் கண்டறிந்தது என்னவெனில் காந்தி படுகொலையில் சாவர்க்கர் முக்கிய சூத்திரதாரி என்பதாகும். இதுக்குறித்து மீண்டும் ஆய்வுச்செய்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம். விசாரணையின் போது காந்திக்கு எதிராக கோட்ஸே முன்வைத்த குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை குறித்து புரிந்துக் கொள்வதற்கான மீளாய்வை காந்தியிலிருந்தே நாம் துவங்குவோம்.
காந்தியைப் பொறுத்தவரை அவர் தீவிரமான மத நம்பிக்கையாளர். தனது மத நம்பிக்கையின் ஒரு பகுதிதான் அரசியல் என உறுதியாக நம்பிய மதசார்பற்ற கொள்கைவாதி. காந்தியின் கொள்கைகளான அகிம்சை, ட்ரஸ்ட்ஷிப் சித்தாந்தம், பசுவதை தடை, வர்ணாசிரம சித்தாந்தம், ராமராஜ்யம்-இவற்றையெல்லாம் உருவாக்குவதில் காந்தியின் ஹிந்துமத நம்பிக்கை மிகவும் ஆதிக்கம் செலுத்தியது. சுருக்கமாக காந்தி ஒரு பழமைவாத ஹிந்து ஆவார்.
தீண்டாமைக்கு எதிராக போராடும்போது கூட அவர் ஜாதீய கட்டமைப்பை ஆதரித்தார். உயர்ஜாதியினர் ஆதிக்கத்திற்கு எதிராக உருவான தலித்-தாழ்த்தப்பட்டவர்களின் கூட்டமைப்பை திசை திருப்பினார். அம்பேத்கர் தலித்துகளின் முன்னேற்றத்திற்காக நடத்திய போராட்டத்தை புனே ஒப்பந்தம் மூலம் காந்தி தடுத்து நிறுத்தியதற்கு காரணம் அவரிடம் குடிக்கொண்டிருந்த உயர்ஜாதி உணர்வாகும்.
கோட்ஸே கூட நீதிமன்றத்தில் கூறினான், “எனது ஹிந்துத்துவா மீதான அபிமான உணர்வு உருவெடுத்தது காந்தி மற்றும் சாவர்க்கரின் சிந்தனைகளின் மூலமாகும்” என. ஆனால் காந்தியின் கொள்கை வேதாந்த ஹிந்துத்துவம் என்பதும், சாவர்க்கரின் கொள்கை காலனியாதிக்க ஹிந்துத்துவம் என்பதையும் அடையாளங்காண கோட்ஸேயால் இயலவில்லை. கோட்ஸேயின் முக்கிய குற்றச்சாட்டே காந்தி இந்தியாவை துண்டாட துணைபோனார் என்பதாகும்.
1947-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ‘ஹிந்துராஷ்ட்ரா’ என்ற நாளிதழில் கோட்ஸே இவ்வாறு எழுதினான்: ‘சகோதரர்களே! நமது தேசம் துண்டிக்கப்பட்டுவிட்டது!’ பின்னர் காந்திக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக எழுதுகிறான், ‘பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்ததன் மூலம் நீங்கள் பாரதத்தின் நெஞ்சத்தை கோடாரியால் பிளந்து விட்டீர்கள். நீங்கள் உங்கள் கொள்கையை மாற்றவில்லையெனில் அதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டிவரும்’.
ஆனால் நாடு பிரிவினையை குறித்து வரலாறு கூறுவது இதற்கு மாற்றமானதாகும். தேசப் பிரிவினையை கடுமையாக எதிர்த்தவர் காந்தியடிகள் ஆவார். காலனியாதிக்க ஹிந்துத்துவா சக்திகள் பல பத்தாண்டுகளுக்கு முன்பே பிரிவினைக்கு ஆதரவான சூழலை வளர்த்துக்கொண்டு வந்தனர்.
1921-ஆம் ஆண்டு சாவர்க்கர் எழுதிய ‘ஹிந்துத்துவா’ என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார், ’ஹிந்துவும், முஸ்லிமும் இரண்டு தேசங்கள் ஆவர்’. 1923-ஆம் ஆண்டு ஹிந்து மகாசபையின் மாநாட்டில் மதன்மோகன் மாளவியா உரை நிகழ்த்தினார். அதில் அவர்,’இந்தியா ஒருபோதும் ஒரு ஒன்றிணைந்த தேசம் அல்ல’ என தெரிவித்தார். 1924-ஆம் ஆண்டு லாலா லஜபதிராய் ‘த ட்ரிப்யூன்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டது என்னவெனில், ’இந்தியா தனி நாடல்ல’ என்பதாகும். 1937-ஆம் ஆண்டு கோட்ஸேவின் சித்தாந்த குரு சவர்க்கர் அஹ்மதாபாத்தில் நடந்த ஹிந்து மகாசபை மாநாட்டில் கூறியது என்னவெனில், ’இந்தியாவால் ஒரு ஒன்றிணைந்த நாடாக மாற இயலாது’ என்பதாகும். இந்த கருத்துக்களையெல்லாம் காந்தி அங்கீகரிக்கவில்லை.
1940-ஆம் ஆண்டு லாகூர் தீர்மானத்தின் மூலம் முஸ்லிம் லீக் ’பாகிஸ்தான்’ என்ற வாதத்தை முன்வைத்தது. இதனையும் காந்தியடிகள் அங்கீகரிக்கவில்லை. ஆனால், 1945-ஆம் ஆண்டு காங்கிரஸைச் சார்ந்த ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட தலைவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியும் பிரிவினைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். அப்பொழுது கூட காந்தி பிரிவினையை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தார். ஒரு கட்டத்தில் ஜின்னாவை பிரதமராக்கி பிரிவினையை தவிர்க்கலாம் என ஆலோசனை தெரிவித்தார். அதேவேளையில், ஷியாம்பிரசாத் முகர்ஜி போன்ற காலனியாதிக்க ஹிந்துத்துவாவாதிகள் பிரிவினைக்கான ரகசிய செயல்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
முஸ்லிம்களும், தலித்துகளும் ஒன்றிணைந்தால் உயர் ஜாதியினர் அதிகாரத்தின் படிக்கட்டுகளுக்கு வெளியே சென்றுவிடக் கூடிய சூழல் ஏற்பட்டுவிடும் என ஷியாம் பிரசாத் முகர்ஜி அஞ்சினார். இறுதியாக தலைபோனாலும் பரவாயில்லை, தலைவலி மாறினால் போதும் என்ற முடிவை காங்கிரஸ் செயற்குழு எடுத்தது. அங்கேதான் காந்தி மெளனியாக மாறினார்.
கோட்ஸே நீதிமன்றத்தில் வரலாற்றை வளைத்ததற்கு காரணம் ஏதோ ஒன்றை மூடி மறைப்பதற்காகும். கோட்ஸே காந்தி படுகொலைக்கு கூறிய அடுத்த காரணம், அரசு கருவூலத்திலிருந்து பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய பங்கான 55 கோடி ரூபாயை இந்தியா முடக்கி வைத்தபோது காந்தி தலையிட்டு பாகிஸ்தானுக்கு அப்பணத்தை கொடுக்கவேண்டும் என கூறினார் என்பதாகும். இங்கே புரியாத காரணம் என்னவெனில், நாட்டை பிரிப்பதற்கான திட்டங்களை தீட்டிய சங்க்பரிவாரத்திற்கு நாடு துண்டாடப்பட்டதை விட பெரிதா 55 கோடி ரூபாய்? என்பதாகும். ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய 55 கோடி ரூபாயை அந்நாட்டிற்கு வழங்கவேண்டும் என காந்தி கூறியது அவரை கொலைச்செய்ய எவ்வாறு காரணமாகும்? அவ்வாறெனில் நானூறு ஆண்டுகள் இந்தியாவை காலனியாதிக்க நாடாக மாற்றி ஆட்சிபுரிந்த பிரிட்டீஷார் இந்தியாவின் பெரும் செல்வங்களை கொள்ளையடித்தனர். ஆனாலும், சங்க்பரிவாரத்திற்கு ஏன் பிரிட்டீஷாரின் மீது துவேசம் ஏற்படவில்லை? 55 கோடி ரூபாய் விவகாரத்தில் காந்தி யாரையும் திருப்திப்படுத்துவதற்காக செயல்படவில்லை. மாறாக, உண்மை என்று தான் கருதியதை ஆதரித்ததேயாகும்.
அடுத்த காரணமாக கோட்ஸே கூறியது, முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதிலேயே காந்தி குறியாக இருந்தார் என்பதாகும். “பிரிவினையைத் தொடர்ந்து நடந்த வகுப்பு கலவரத்தில் காந்தி ஒருதலைபட்சமாக ஹிந்துக்களிடம் கலவரத்திலிருந்து விலகுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்தார். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் வன்புணர்வுக்கு பலியாகினர்”. இதிலும் உண்மை கோட்ஸேவிற்கு எதிராகவே அமைந்துள்ளது.
ஜவஹர்லால் நேரு 1947-ஆம் ஆண்டு வல்லபாய் பட்டேலுக்கு எழுதிய கடிதத்தில், “கலவரத்தின் பின்னணியில் அதிகமாக செயல்படுவது ஹிந்துக்களும், சீக்கியர்களும்தான்” என தெரிவித்துள்ளார். எந்த வன்முறையையும் எதிர்க்கவேண்டும் என்பது காந்தியின் அகிம்சை கொள்கையின் ஒரு பகுதியாகும். வன்முறை உருவானதன் காரணமாக ஒரு கட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தை கூட காந்தி நிறுத்தி வைத்தார்.
1921-ஆம் ஆண்டு ஒத்துழையாமை போராட்ட வேளையில் சவுரிசவ்ரா என்ற இடத்தில் வன்முறை வெடித்தபொழுது காந்தி போராட்டத்தை வாபஸ் பெற்றார். கிலாஃபத்தின் நிழலில் வளர்ந்துவந்த கேரளாவின் மாப்பிள்ளைகள் போராட்டத்தில் சில அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்ததாக கேள்விப்பட்ட வேளையில் மலபார் போராட்டத்தை காந்தி கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். இவ்விவகாரத்தில் கோட்ஸே உண்மையை மூடி மறைத்துள்ளார்.
இந்நிலையில், கோட்ஸே கூறிய காரணங்களெல்லாம் பொய்யானவையாக இருக்கும்போது ஒரு கேள்வி மட்டும் எஞ்சியிருக்கிறது. ஏன் காந்தி கொல்லப்பட்டார்? என்பதுதான் அக்கேள்வி. இதனைப் புரிந்துக்கொள்ள வேண்டுமெனில் ஏகாதிபத்திய-சியோனிஷ்டுகளுடன் சங்க்பரிவார்களுக்கு இருந்த ரகசிய உறவை அடையாளம் காணவேண்டும்.
சாவர்க்கரும் அவரது கூட்டாளிகளும் வளர்த்தது தேசிய ஹிந்துத்துவ அரசியல் அல்ல. மாறாக ஏகாதிபத்திய-சியோனிஷ விருப்பங்களை பாதுகாக்கும் காலனியாதிக்க ஹிந்துத்துவா அரசியலாகும். அது ஒரு ஏகாதிபத்திய கொள்கையை அடிப்படையாக கொண்ட சித்தாந்தம். ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் கலாச்சாரத்தையும், நம்பிக்கையையும் மாற்றியமைத்து தங்களுக்கு சாதகமான காலனியாதிக்க மனோநிலையை உருவாக்குவதுதான் இவர்களது திட்டம். அதற்காக புதிய அமைப்புகள், மதங்கள், மனித தெய்வங்கள் என எதனையும் ஏகாதிபத்திய சக்திகள் உருவாக்கும்.
காங்கிரஸ் என்றதொரு இயக்கத்தை உருவாக்கியது ஏ.ஓ.ஹ்யூம் என்ற பிரிட்டீஷ் காரர் ஆவார் என்பது இங்கே சிந்திக்கவேண்டிய விஷயமாகும். இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து ‘காதியானிசம்’ என்றதொரு காலனியாதிக்க பிரிவை உருவாக்கினர். அதுபோலவே சங்க்பரிவார் என்ற காலனியாதிக்க ஹிந்துதுத்துவா இயக்கமும் உருவானது.
நாத்திகவாதியான சாவர்க்கர் தனது இளமைப் பருவத்தில் பிரிட்டீஷ் எதிர்ப்பு போராட்டங்களில் விருப்பங்காட்டினார். 1857-ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திர போராட்டத்தைக் குறித்து சாவர்க்கர் 1909 ஆம் ஆண்டு ஒரு நூலை எழுதினார். அதில் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஐக்கியத்துடன் போராடியதை குறிப்பிடுகிறார். மேலும் முஸ்லிம்கள் செய்த தியாகத்தை தனியாக பாராட்டி எழுதியுள்ளார். பின்னர் உயர்கல்வியை கற்பதற்காக சவர்க்கர் பிரிட்டனுக்கு சென்றார். ஆனால், அங்கே அவர் சற்று தீவிரமாக இந்திய அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சாவர்க்கரின் நண்பர் ஒரு பிரிட்டீஷ்காரரை கொலைச்செய்த வழக்கில் சாவர்க்கரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். விசாரணையில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனையை விதித்தது. இதனைத் தொடர்ந்து அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் வைத்து அவரது அரசியல் சித்தாந்தம் மாற்றம் அடைந்தது. வாழ்க்கை முழுவதையும் சிறையில் கழிப்பதை விரும்பாத சாவர்க்கர் பிரிட்டீஷ் அரசுடன் சமாதானமாக செல்லும் நோக்கில் மன்னிப்பு கடிதத்தை எழுதினார்.
பிரிட்டீஷ் எதிர்ப்பு செயல்பாடுகளிலிருந்து விலகுவதும், மீதமுள்ள காலத்தை பிரிட்டீஷாருக்கு சேவை புரிவதில் கழிப்பதும் அக்கடிதத்தின் உள்ளடக்கமாகும்.
1913-ஆம் ஆண்டு அந்தமான் சிறையை பார்வையிட சென்ற பிரிட்டீஷ் அதிகாரி ஸர் ரெஜினால்ட் க்ராடக்குடன் சாவர்க்கர் ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தினார். இதன் பலனாக, சிறையில் படிப்பு மற்றும் ஆய்வில் ஈடுபடவும், வெளி உலகத்துடன் தொடர்புக் கொள்ளவும் அதிக சுதந்திரம் அவருக்கு கிடைத்தது. இவ்வாறு அந்தமான் சிறையில் வைத்து 1921-ஆம் ஆண்டு சவர்க்கர் ‘ஹிந்துத்துவா’ என்ற நூலை எழுதினார். ’ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒரு தேசமல்ல’ என்ற வாதத்தை இந்நூலில் அவர் குறிப்பிடுகிறார்.
1925-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் உருவானபோது சாவர்க்கர் சிறையில் இருந்தார். அவ்வியக்கத்தின் துவக்க விழாவில் பங்கேற்க தனது பிரதிநிதியாக தனது சகோதரர் கோபால் கோட்ஸேவை அனுப்பி வைத்தார்.
சங்க்பரிவாரத்தின் ‘காந்தி எதிர்ப்பு’ கொள்கை பிரிவினையின் பிறகு உருவானதல்ல. 1926-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் ஹெட்கேவார், ”காந்தியின் அகிம்சை வழி நாட்டில் அதிகரித்துவரும் ஆவேசத்தை கெடுத்துவிடுகிறது. ஆகையால் காந்தியை ஆதரிக்க இயலாது” என தெரிவித்தார். ஆனால், மறுபுறம் நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் ஆயுத போராட்டத்தையும் ஆர்.எஸ்.எஸ் எதிர்த்தது. இதற்கான காரணத்தை ஆர்.எஸ்.எஸ் விளக்கவில்லை. காங்கிரஸ் நடத்திய அனைத்து போராட்டங்களையும் ஆர்.எஸ்.எஸ் எதிர்த்தது. ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் முதுகில் குத்தியது.
இரண்டாவது உலகப்போர் நடைபெற்ற வேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர்களில் ஒருவரான ஷியாம் பிரசாத் முகர்ஜி பிரிட்டீஷ் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், ”போர் உறுதியாகிவிட்டது. இக்கட்டத்தில் காங்கிரஸ் போராட்டத்தை வலுப்படுத்தினால் பிரிட்டீஷ் அரசு அதனை கடுமையாக எதிர்கொள்ளவேண்டும்” என தெரிவித்தார்.
1948-ஆம் ஆண்டு காந்தி படுகொலையின் விசாரணை வேளையில் கோட்ஸே கூறியவை 1947-ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த நிகழ்வுகளுடன் தொடர்புடையவனவாகும். அவ்வாறெனில், 1944-ஆம் ஆண்டு காந்தியை கொல்ல ஏன் கோட்ஸே விரும்பினார்? சுருக்கமாக கூறவேண்டுமெனில், கோட்ஸே காந்தியை படுகொலைச் செய்ய தூண்டியதற்கு கூறிய காரணங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவையாகும். மனிதர்களை நேசித்த காந்தியடிகளுக்கு ஹிந்து விரோதமோ, முஸ்லிம் விரோதமோ, பிரிட்டீஷ் விரோதமோ இல்லை. பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் வேளையிலும் நெருக்கடியான காலக்கட்டங்களில் பிரிட்டீஷாருக்கு உதவியுள்ளார். பிரிட்டனுக்கும், டச்சுக்காரர்களுக்கும் (நெதர்லாந்து) இடையே நடந்த போவர் போர், முதல் உலகப்போர் ஆகியவற்றில் பிரிட்டீஷாருக்கு ஆதரவாக சேவை புரிந்தார்.
சமூகத்தில் காணப்படும் அநீதி, சுரண்டல் ஆகியவற்றை எதிர்ப்பை தனது வாழ்க்கை முறையாக கொண்டவர் காந்தியடிகள். ஆகையால்தான் இருபது ஆண்டுகளாக நீடித்த ஆப்பிரிக்க போராட்டம் முடிந்து இந்தியாவுக்கு திரும்பியதும் ஓய்வெடுக்காமல் பிரிட்டீஷாருக்கு எதிராக போராட துவங்கினார். இவ்வேளையில் உலகின் பல இடங்களில் நடந்த அநீதிக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அதில் முக்கியத்துவம் வாய்ந்தது 1938-ஆம் ஆண்டு சியோனிஸ்டுகள் ஃபலஸ்தீனை ஆக்கிரமித்ததை எதிர்த்து, அரபுக்களின் உரிமைகளை ஆதரித்து குரல் கொடுத்ததாகும். காந்தியின் நிலைப்பாடு சியோனிஸ்டுகளுக்கு சர்வதேச தளத்தில் மிகப்பெரிய தலைவலியாக மாறியது. அதேவேளையில் சாவர்க்கரும் அவரது கூட்டாளிகளும் சியோனிஸ்டுகளை ஆதரித்தனர். இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு காந்தி அதிகாரத்தில் பங்கேற்காமல், ஓய்வெடுக்காமல் மற்றொரு போராட்டத்திற்கு செல்வார் என்பதை சியோனிஸ்டுகள் புரிந்துக்கொண்டனர். ஆதலால் காந்திக்கு தடை விதிப்பது அவர்களது முக்கிய தேவையாக இருந்தது.
இந்த பணியை ஏற்றுக் கொண்டவர்கள் இந்தியாவில் சியோனிஸ்டுகளின் நம்பிக்கை பாத்திரமான காலனியாதிக்க ஹிந்துத்துவா சக்திகளாவர். காந்தி படுகொலையின் பலனை யார் அனுபவித்தார்கள் என்பதும், யாரெல்லாம் ஆதாயம் பெற்றார்கள் என்பதையும் ஆராயவேண்டும்.முதலாவதாக, சர்வதேச தளத்தில் பெரும் சலனங்களை உருவாக்கிய காந்தியின் சியோனிஷ எதிர்ப்பு அணைந்து போனது.
இரண்டாவதாக ஆர்.எஸ்.எஸ்ஸின் காலனியாதிக்க ஹிந்துத்துவா சித்தாந்தத்தின் முகத்திற்கு தேசிய ஹிந்துத்துவா முக மூடியை அணியவும் சாத்தியமானது. தொடர்ந்து உருவாக்கிய முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் கொள்கையின் மூலமாக தாங்கள்தாம் ஹிந்துக்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி என்ற உணர்வை சாமான்யர்களின் உள்ளங்களில் நிறுவுவதை முக்கிய பணியாக கொண்டு செயலாற்றி வரும் ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் மிகப்பெரும் அழிவுசக்தியாக மாறிவருகிறது என்பதை அண்மையில் இந்த தேசத்தை உலுக்கிய குண்டுவெடிப்புகள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.
-அ.செய்யது அலீ